Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுவரோவியப் படைப்புக்கு 100,000 பவுண்ட் விலையா?

வானிலிருந்து பனி பொழியும் அழகை ரசிக்கிறான் ஒரு சிறுவன். அவனுக்குப் பின்னால் பனி எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

வாசிப்புநேரம் -
சுவரோவியப் படைப்புக்கு 100,000 பவுண்ட் விலையா?

கோப்புப் படம்: Reuters/Rebecca Naden

வானிலிருந்து பனி பொழியும் அழகை ரசிக்கிறான் ஒரு சிறுவன். அவனுக்குப் பின்னால் பனி எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் அது பனியல்ல. பனிபோன்று தோற்றமளிக்கும் சாம்பல். தொழிற்பேட்டையில் உள்ள குப்பைத் தொட்டியில் எரியும் தீயிலிருந்து கிளம்பிய  சாம்பலை சிறுவன் பனி என்று நினைத்து அதை  நாக்கில் பிடிக்க முயற்சி செய்கிறான்.

இது, பிரபல பிரிட்டிஷ் சாலைச் சுவரோவியக் கலைஞர் Banksy-இன் படைப்பு. படைப்பின் பெயர் "Season's Greetings".

அதனைக் காட்சிக்கூடம் ஒன்று, நூறாயிரம் பவுண்டுக்கு (175,451 வெள்ளி) மேல் கொடுத்து வாங்கியுள்ளது.

வேல்ஸில் வாகனப் பட்டறை ஒன்றின் மூலையில் தீட்டப்பட்ட அந்த ஓவியத்தை Brandler Galleries நிறுவனம் வாங்கியுள்ளது.

ஆனால், அதற்கு மொத்தம் எவ்வளவு செலவானது என்பதை அது குறிப்பிடவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்