Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'மேற்கத்திய நாடுகளின் தாக்குதல் என்னை மேலும் வலிமையாக்கியுள்ளது'-சிரியா அதிபர்

'மேற்கத்திய நாடுகளின் தாக்குதல் என்னை மேலும் வலிமையாக்கியுள்ளன'-சிரியா அதிபர்

வாசிப்புநேரம் -
'மேற்கத்திய நாடுகளின் தாக்குதல் என்னை மேலும் வலிமையாக்கியுள்ளது'-சிரியா அதிபர்

(படம்: Reuters)

மேற்கத்திய நாடுகள் சிரியா மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் தம்மை மேலும் வலிமையாக்கியிருப்பதாக, சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் கூறியிருக்கிறார். அந்த வலிமையைக் கொண்டு, எதிரிகளைத் தம்மால் வீழ்த்தமுடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், அந்தத் தாக்குதல் சம்பவங்கள், மேற்கத்திய நாடுகளின் நம்பகத்தன்மையை முற்றிலும் சீர்குலைத்துவிட்டதாக அவர் கூறினார்.

நேற்று காலை சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ் நகரம் ஆகியவற்றில் உள்ள அரசாங்கக் கட்டடங்களை, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தாக்கின.
   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்