Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'COVID-19 கிருமி, வெளவாலிலிருந்து மனிதர்களுக்கு மற்றொரு விலங்கு வழி பரவியிருக்கலாம்'

COVID-19 கிருமி, வெளவாலிலிருந்து மனிதர்களுக்கு மற்றொரு விலங்கு வழி பரவியிருக்கலாம் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

COVID-19 கிருமி, வெளவாலிலிருந்து மனிதர்களுக்கு மற்றொரு விலங்கு வழி பரவியிருக்கலாம் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

கிருமிப்பரவல் தொடங்கிய சீனாவின் வூஹான் நகருக்குச் சென்ற நிபுணர் குழு, இன்று வெளியிட்ட அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டது.

COVID-19 கிருமி ரகத்துடன் ஆக நெருக்கமான வகைகள், வெளவாலில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் உருமாற்றம் இன்னொரு விலங்கு வழி ஏற்பட்டிருக்கலாம் என்று அறிக்கை புலப்படுத்தியது.

இருப்பினும் அதே வேளை, கிருமி உறையவைக்கப்பட்ட உணவு வழி பரிவியிருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது என்று கூறப்பட்டது.

கிருமி, ஆய்வுக் கூடத்திலிருந்து
கசிந்திருக்கக்கூடிய சாத்தியம் மிகவும் குறைவு என்றும் நிபுணர் குழு கூறியது.

SARS-CoV-2 ரகக் கிருமியுடன் தொடர்புடைய எந்தக் கிருமியும், 2019-ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு ஆய்வுக் கூடத்தில் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை
என்று அது சுட்டியது.

உலகச் சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு, கிருமிப்பரவலின் தொடக்கத்தைக் குறித்து ஆராய, வூஹான் நகருக்கு ஜனவரி மாதத்தில் சென்றது.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்