Images
  • batman
    (படம்: The Batman Of Spring Hill/ Facebook)

பள்ளியில் கேலி செய்யப்பட்ட 3 வயதுச் சிறுமிக்கு உதவிய Batman

பிரபல கதாபாத்திரமான Batman, தமது Gotham City நகரைத் தீங்கிழைப்பவர்களிடமிருந்து காப்பாற்றுவார்.

அமெரிக்காவில் ஃபுளோரிடா (Florida) மாநிலத்தின் Spring Hill எனும் பகுதியில் Batman இப்போது, நிஜ வாழ்க்கையில் உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்குக் கரம் நீட்ட வருகிறார்.

The Spring Hill Batman எனும் பெயரில் Batman கதாபாத்திரத்தைப் போன்று வேடமிடுகிறார் ஜெக் எஸ்பரி (Jack Asbury).

அவர் பள்ளிக்குச் செல்லத் தயங்கிய 3 வயதுச் சிறுமியை ஊக்கப்படுத்திப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார். அதற்காக ஊடகங்களில் பாராட்டப்பட்டுவருகிறார்.


எரிக்கா என்ற சிறுமி பள்ளியில் மற்ற மாணவர்களால் கேலி செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டாள்.

பள்ளி முடிந்து எரிக்கா காயங்களுடன் வீடு திரும்பியதை அவளுடைய தாயார் கவனித்தார்.

சில மாணவர்கள் அவளை அடித்ததாகவும் அவள் மீது காலணிகளை எறிந்ததாகவும் சிறுமி கூறினாள்.

சம்பவத்தைத் தொடர்ந்து எரிக்கா பள்ளிக்குச் செல்ல அஞ்சினாள்.

தாயார் The Spring Hill Batman-னின் Facebook பக்கத்தில் இதைப் பற்றி பதிவு செய்தார்.

பின்னர், Batman போன்று வேடமிட்ட எஸ்பரி, ஒரு நாள் எரிக்காவின் கையைப் பிடித்து அவளின் பள்ளிக்கு அழைத்து சென்றார்.

அவர் எரிக்காவைக் கேலி செய்தவர்களிடம், தாம் எரிக்காவின் உயிர்த்தோழன் என்று கூறினார்.


அதன் பிறகு, எரிக்காவுக்குப் பள்ளிக்குச் செல்வதில் பிரச்சினையில்லை.

பிள்ளைகளுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறார் இந்த Spring Hill Batman! 

Top