Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஈரான் பற்றி ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் BBC புகார்

BBC செய்தி நிறுவனம், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈரான் பற்றி ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் புகார் செய்யவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஈரான் பற்றி ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் BBC புகார்

கோப்புப் படம்: REUTERS/Adrian Dennis

BBC செய்தி நிறுவனம், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈரான் பற்றி ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் புகார் செய்யவிருக்கிறது.

BBC-யின் லண்டன் தலைமையகத்தில் பெர்ஷிய மொழிச் சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களையும் ஈரானிலுள்ள அவர்களது குடும்பத்தாரையும் டெஹ்ரான் மிரட்டுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேரடியாக அச்சுறுத்துதல், உறவினர்களைக் கைது செய்தல், பயணத் தடை எனப் பலவிதமான வழிகளில் ஈரான் அவர்களைத் துன்புறுத்தி வருவதாக BBC குறிப்பிட்டது.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிமர் தேர்தலுக்குப் பிறகு, பெர்ஷிய மொழிச் சேவைப் பணியாளர்கள் குறிவைக்கப்பட்டதாக BBC தெரிவித்தது.

அந்தத் தேர்தலில், வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு இருப்பதாக அப்போது டெஹ்ரான் குறைகூறியிருந்தது.

தனது பணியாளர்களை அச்சுறுத்துவதை ஈரான் நிறுத்தவேண்டுமென, ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாட்டு மனித உரிமை மன்றக் கூட்டத்தில் BBC வேண்டுகோள் விடுக்கவிருக்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்