Images
  • Sun Bear
    (படம்: Pixabay)

வீட்டுக்குள் அத்துமீறி வந்த அழையா விருந்தாளி

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் காட்டு பகுதி அருகே உள்ள வீட்டிற்குள் கரடி ஒன்று புகுந்து வீட்டை நாசம் செய்துவிட்டு தப்பிசென்றுள்ளது.

அந்தச் சம்பவம் கடந்த வெள்ளிகிழமை நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கரடி வீட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளது.

அதன்பிறகு மக்கள் வரும் சத்தத்தைக் கேட்டு கரடி வீட்டின் சுவரை உடைத்து வெளியே தப்பித்து சென்றது.

வீட்டில் உள்ள குப்பையின் வாசம் கரடியை ஈர்த்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

கரடியால் யாருக்கும் எந்த காயமும் இல்லை.

கொலராடோ பகுதியில் கடந்த சில வாரங்களாக கரடிகளின் அச்சுறுத்தல் அதிகமாகி வருகின்றன.

அவை இதுவரை 35 வாகனங்களை உடைத்தும், 9 வீடுகளுக்குள் புகுந்தும் உள்ளன.  

Top