Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பீருக்கு $94,000 கட்டணம் செலுத்திய ஆடவர்

ஆஸ்திரேலியக் கிரிக்கெட் செய்தியாளர் ஒருவர் பிரிட்டனில் அருந்திய பீருக்கு சுமார் 94,000 வெள்ளியைக் கட்டணமாகச் செலுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
பீருக்கு $94,000 கட்டணம் செலுத்திய ஆடவர்

(படம்: Pixabay)

ஆஸ்திரேலியக் கிரிக்கெட் செய்தியாளர் ஒருவர் பிரிட்டனில் அருந்திய பீருக்கு சுமார் 94,000 வெள்ளியைக் கட்டணமாகச் செலுத்தியுள்ளார். அதனை 'வரலாற்றில் ஆக விலையுயர்ந்த பீர்' என்று பீட்டர் லாலோர் வருணித்தார்.

Ashes test தொடர் பற்றிச் செய்தி சேகரிக்க அவர் பிரிட்டனுக்குச் சென்றபோது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

மென்செஸ்ட்டரில் இருக்கும் மதுக்கூடத்தில் பானம் அருந்தச் சென்றிருந்தார். அப்போது கண்ணாடி அணியாததால் பணம் செலுத்த வங்கி அட்டையைக் கொடுத்த போது பீருக்கான கட்டணப் பட்டியலை அவர் கவனிக்கவில்லை. ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பிய பின்னர், தமது வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 94,000 வெள்ளி எடுக்கப்பட்டிருந்ததை உணர்ந்தார்.

சுமார் 2,300 வெள்ளியைப் பரிவர்ந்தனை தொகையாகவும் செலுத்தியுள்ளார்.

மதுக்கூடத்தின் ஊழியர் பீர் போத்தலின் கட்டணத்தைத் தவறுதலாகப் பதிவு செய்ததே குழப்பத்திற்குக் காரணம்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக Guardian நாளேடு தெரிவித்தது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்