Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவின் பெய்ச்சிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் புறக்கணிக்கப்படுமா? நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசித்தல்

அமெரிக்கா, அனைத்துலக நட்பு நாடுகளுடன் இணைந்து பெய்ச்சிங்கின் 2022ஆம் ஆண்டு குளிர்கால விளையாட்டுகளைப் புறக்கணிப்பது குறித்து ஆலோசித்துவருகிறது.

வாசிப்புநேரம் -
சீனாவின் பெய்ச்சிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் புறக்கணிக்கப்படுமா? நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசித்தல்

(கோப்புப் படம்: REUTERS/Aly Song)

அமெரிக்கா, அனைத்துலக நட்பு நாடுகளுடன் இணைந்து பெய்ச்சிங்கின் 2022ஆம் ஆண்டு குளிர்கால விளையாட்டுகளைப் புறக்கணிப்பது குறித்து ஆலோசித்துவருகிறது.

இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

எனினும் சீனாவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகக் கூறப்படுவதன் தொடர்பில் நெருக்குதலும் அக்கறைகளும் அதிகரித்துவருகின்றன.

பிற நாடுகளுடன் இணைந்து கூட்டாக விளையாட்டுகளைப் புறக்கணிப்பது குறித்து அமெரிக்கா கலந்துரையாட விரும்புவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நெட் பிரைஸ் (Ned Price) கூறினார்.

அந்த விவகாரத்தில் நட்பு ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுவது குறித்து நட்பு நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து ஆலோசிக்கும் என்றும் அவர் சொன்னார்.

விளையாட்டுகளைப் புறக்கணிப்பதும் அதிலிருந்து விலகுவதும் ஒன்றல்ல என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

விளையாட்டுகளை நாடுகள் புறக்கணிக்கின்றன என்றால் அந்த நிகழ்ச்சிக்கு அவை அரசாங்கப் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கமாட்டா.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்