Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இஸ்ரேலியப் பிரதமரின் மனைவி மீது மோசடிக் குற்றச்சாட்டு

இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹூவின் மனைவி மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
இஸ்ரேலியப் பிரதமரின் மனைவி மீது மோசடிக் குற்றச்சாட்டு

(படம்: REUTERS/Brendan McDermid/File Photo)

இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹூவின் மனைவி மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

59 வயது சாரா நெட்டன்யாஹூ, அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்திய சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்தது.

திருமதி. சாராவும் மற்றோர் அரசாங்க ஊழியரும், அரசாங்கப் பணத்திலிருந்து பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்துக்குப் பிரபல உணவங்களில் இருந்து உணவு தருவித்ததாகக் கூறப்படுகிறது.

100 ஆயிரம் டாலருக்கு அதிகமான நிதியை உணவு வாங்குவதற்கு அவர்கள் செலவு செய்ததாக நம்பப்படுகிறது.

பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்தில் சமையல்காரர் இருந்தால், இவ்வாறு வெளியில் இருந்து உணவு தருவிப்பதற்கு, இஸ்ரேலியச் சட்டப்படி அனுமதியில்லை.

பிரதமர் பென்யாமின் நெடன்யாஹூவின் மீது ஏற்கனவே இதுபோன்ற மோசடிக் குற்றச்சாட்டு இருக்கும் வேளையில், தமது மனைவி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்