Images
  • benz (1)
    (படம்: Reuters)

மிதமிஞ்சிய புகை.. ஆயிரக்கணக்கில் மீட்டுக்கொள்ளப்படும் Mercedes Benz வாகனங்கள்

ஜெர்மனியில் உள்ள டாய்ம்லர் (Daimler) கார் உற்பத்தி நிறுவனம், ஆயிரக்கணக்கான மெர்சிடீஸ் பென்ஸ் (Mercedes Benz)வாகனங்களை மீட்டுக்கொண்டுள்ளது.

டீசலில் ஓடும் கார்களிலிருந்து மிதமிஞ்சிய அளவு புகை வெளியேறுவதால் அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறைந்தபட்சம் 260,000 மெர்சிடீஸ் பென்ஸ் "Sprinter" ரக வாகனங்கள் பாதிக்கப்படலாம்.

ஜெர்மனியின் சாலைப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக டாய்ம்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிதமிஞ்சிய அளவு டீசல் புகை வெளியேறிய காரணத்தால், அண்மை ஆண்டுகளில் அந்த நிறுவனம் 700,000 கார்களை மீட்டுக் கொண்டது.

2015 ஆம் ஆண்டு கார்களிலிருந்து டீசல் புகை வெளியேற்றப்படுதன் தொடர்பில் ஓர் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால், அதில் தனக்குத் தொடர்பு இல்லை என்று டாய்ம்லர் நிறுவனம் தொடர்ந்து கூறி வருகிறது.  

Top