Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'யாரைக் கூறினாய் கிழவன் என்று?': அமெரிக்காவின் முன்னாள் துணையதிபர்

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துப் போட்டியிடக் களம் இறங்கியிருப்பவர்களில் முன்னாள் துணையதிபர் ஜோ பைடனும் ஒருவர்.

வாசிப்புநேரம் -
'யாரைக் கூறினாய் கிழவன் என்று?': அமெரிக்காவின் முன்னாள் துணையதிபர்

(படம்: Mike Blake/Reuters)

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துப் போட்டியிடக் களம் இறங்கியிருப்பவர்களில் முன்னாள் துணையதிபர் ஜோ பைடனும் ஒருவர்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவதற்குப் போட்டியிடுவோரில் முன்னணி வகித்து வருகிறார் 76 வயது பைடன்.

அவரின் வயதை மேற்கொள்காட்டி அவரின் திறமை குறித்துக் கேள்வியெழுப்புகின்றனர் உத்தேச வேட்பாளர்கள் சிலர்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஜனநாயகக் கட்சி விவாதத்தில் அவர் சில விவரங்களை மறந்ததாக மற்றோர் உத்தேச வேட்பாளர் ஜூலியன் கேஸ்ட்ரோ (Julián Castro) கூறினார். ஆனால் பைடன் எந்த விவரத்தையும் தவறாகக் கூறவில்லை என்று பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

நிருபர்களிடம் பேசிய திரு பைடன், தாம் ஆரோக்கியமாக இருப்பதை நிரூபிக்க மருத்துவச் சான்றிதழ் வழங்கத் தயார் என்று கூறினார். வேண்டுமென்றால் நிருபர்களுடன் மல்யுத்தம் செய்யவும் தயார் என்று கூறினார் அவர்.

கேஸ்ட்ரோவின் செயல்களைச் சக வேட்பாளர்கள் சாடியுள்ளனர்.

அதிபர் தேர்தலுக்குத் தகுதிபெற்று அதில் வெற்றிபெற்றால் திரு. பைடன் அமெரிக்காவின் ஆக வயதான அதிபராவார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்