Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சீனா பொறுப்பேற்கவேண்டும்: அமெரிக்க அதிபர் பைடன்

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சீனா பொறுப்பேற்கவேண்டும்: அமெரிக்க அதிபர் பைடன்

வாசிப்புநேரம் -

சீனா, நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்பேற்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட முதல் அதிகாரபூர்வ செய்தியாளர் கூட்டத்தில் அவர் அது குறித்துப் பேசினார்.

சீன அதிபரைத் தமக்கு நீண்ட காலமாகத் தெரியும் என்றும் அவர் சொன்னார்.

வெவ்வேறு விவகாரங்களில் சீனா அதன் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்கச் செய்வதற்கு அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் என்றார் அதிபர்.

தைவான், ஹாங்காங், தென் சீனக் கடல் விவகாரம், வீகர் (Uighur) சிறுபான்மையினரைச் சீனா நடத்தும் விதம் போன்றவற்றைத் திரு பைடன் சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்