Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

G7 சந்திப்பில் அதிபர் பைடனின் நிர்வாகம் COVAX தடுப்பூசித் திட்டத்துக்கு 4 பில்லியன் டாலர் நிதி வழங்கவிருப்பதாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் G7 சந்திப்பின்போது COVAX தடுப்பூசித் திட்டத்துக்கு 4 பில்லியன் டாலர் நிதி வழங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் G7 சந்திப்பின்போது COVAX தடுப்பூசித் திட்டத்துக்கு 4 பில்லியன் டாலர் நிதி வழங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை நாடுகளுக்கு நியாயமான முறையில் தடுப்பூசி சென்று சேருவதை உறுதிசெய்யும் அந்தத் திட்டத்துக்குக் கூடுதல் நன்கொடைகளை மற்ற நாடுகளும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் G7 தொழில்வள நாடுகளின் தலைவர்களுடன் நடத்தவிருக்கும் தமது முதல் சந்திப்பில், COVAX திட்டத்துக்கு உடனடியாக 2 பில்லியன் டாலர் நன்கொடை வழங்குவது பற்றி அறிவிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

மற்ற நாடுகள் நிதி வழங்குவதற்கான அவற்றின் கடப்பாட்டை நிறைவுசெய்யும் வேளையில், எஞ்சிய 2 பில்லியன் டாலரை அமெரிக்கா அடுத்த ஈராண்டுகளில் வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

COVAX திட்டத்துக்குக் குறைந்தது 15 பில்லியன் டாலர் நிதி தேவைப்படுகிறது.

முதல் தொகுதியாக அமெரிக்கா வழங்கவிருக்கும் 2 பில்லியன் டாலர் நிதி, மேலும் பல நாடுகள் நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்கும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

அமெரிக்கா வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிதிக்கு, அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்