Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: முகக்கவசம் அணிவதை நாடு முழுவதும் கட்டாயமாக்குவது குறித்து பைடன் ஆலோசனை

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜோ பைடன், கொரோனா கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் முடக்கம் அறிவிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜோ பைடன், கொரோனா கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் முடக்கம் அறிவிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு சமூகங்களும், வட்டாரங்களும் மாறுபட்ட சூழல்களை எதிர்கொண்டுவருவதால் முடக்கம் அறிவிப்பது பயன்தராது என்று திரு. பைடன் குறிப்பிட்டார்.

இருப்பினும், முகக்கவசம் அணிவதை நாடு முழுவதும் கட்டாயமாக்குவது குறித்து திரு. பைடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

முகக்கவசம் அணிவது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நடவடிக்கை அல்ல என்ற அவர், அது குடிமக்களின் கடமை என்றார்.

நோய்ப்பரவலின் பாதிப்புகளைச் சமாளிக்க மத்திய அரசாங்கம் மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும் திரு. பைடன் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்