Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒரே மாதத்தில் 383 மில்லியன் டாலர் பிரசார நிதி திரட்டியுள்ள அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்!

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் திரு. ஜோ பைடன் ஆகஸ்ட் மாதத்தின் தமது சொந்த நிதித்திரட்டுச் சாதனையை முறியடித்துள்ளார்!

வாசிப்புநேரம் -

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் திரு. ஜோ பைடன் ஆகஸ்ட் மாதத்தின் தமது சொந்த நிதித்திரட்டுச் சாதனையை முறியடித்துள்ளார்!

செப்டம்பரில் அவர் 383 மில்லியன் டாலர் பெற்றுள்ளார்.

அவருக்கும் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையே நிகழ்ந்த சர்ச்சைமிக்க தொலைக்காட்சி விவாதத்தால்
நிதி குவிந்ததாகக் கூறப்படுகிறது.

விவாதத்தில் அதிபர் டிரம்ப், திரு. பைடன் பேசிக்கொண்டிருந்தபோது பலமுறை குறுக்கிட்டார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப் சென்ற மாதம் 248 மில்லியன் டாலர் பிரசார நிதி திரட்டியிருந்தார்.

அமெரிக்காவில் நவம்பர் 3 தேர்தல் தினம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் திரு. பைடன் திரு. டிரம்ப்பைவிட அதிகமான பிரசார நிதியைத் திரட்டிவருகிறார்.

2008 செப்டம்பர்-இல் அமெரிக்க முன்னாள் அதிபர் திரு. பராக் ஒபாமா திரட்டிய சாதனைத் தொகையான 200 மில்லியன் டாலரை மிஞ்சிவிட்டது திரு. பைடன் திரட்டியுள்ள தொகை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்