Images
  • biden (4)
    (படம்: REUTERS/Kevin Lamarque)

டிரம்ப் நிர்வாகத்தின்போது கசப்படைந்த உறவுகளைச் சரிசெய்யும் இலக்குடன் பிரிட்டன் சென்றுள்ள பைடன்

டிரம்ப் நிர்வாகத்தின்போது கசப்படைந்த உறவுகளைச் சரிசெய்யும் இலக்குடன் G7 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரிட்டன் சென்றுள்ளார்.

உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதிலும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதிலும் திரு. பைடன் ஆர்வம் கொண்டுள்ளார்.

கிருமிப்பரவல் சூழலில் இருந்து உலகம் மீண்டுவரும் நிலையில், சீனாவுடன் போட்டியிடக்கூடிய ஆற்றலை அமெரிக்கா கொண்டிருப்பதைக் காட்டவேண்டும் என்று அவர் கருதுகிறார்.

8 நாள் ஐரோப்பியப் பயணத்தின்போது திரு பைடன் 3 நாடுகளுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-Reuters

Top