Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

6 முக்கிய பொறுப்புகளுக்கு அதிகாரிகளை முன்மொழிந்துள்ள பைடன்

அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. ஜோ பைடன் 6 முக்கியப் பொறுப்புகளை ஏற்கவிருப்போரின் பெயர்களை அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
6 முக்கிய பொறுப்புகளுக்கு அதிகாரிகளை முன்மொழிந்துள்ள பைடன்

(கோப்புப் படம்: Reuters)

அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. ஜோ பைடன் 6 முக்கியப் பொறுப்புகளை ஏற்கவிருப்போரின் பெயர்களை அறிவித்துள்ளார்.

"அமெரிக்கா பழைய நிலைக்குத் திரும்பி விட்டது. உலகை வழிநடத்தத் தயாராகி விட்டது. அதிலிருந்து அமெரிக்கா பின்வாங்கவில்லை" என்று திரு. பைடன் கூறினார்.

திருவாட்டி அவ்ரில் ஹேன்ஸ் (Avril Haines)உளவுத்துறைத் தலைவராக நியமிக்கப்படலாம். அது உறுதியானால், அந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண்மணி என்ற பெருமை அவரைச் சேரும்.

அலேஹான்ட்ரோ மயோர்காஸ் (Alejandro Mayorkas) உள்நாட்டுப் பாதுகாப்புத்துறைத் தலைவராக நியமிக்கப்படுவார்.

வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் (Antony Blinken)

பருவநிலை மாற்றத் தூதர் ஜான் கேர்ரி (John Kerry).

வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் (Jake Sullivan)

ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃஃபில்ட் (Linda Thomas-Greenfield).

என 6 பேரைத் திரு. பைடன் முன்மொழிந்துள்ளார். அவர்களுடைய நியமனத்துக்கு ஒப்புதல் வழங்குமாறு செனட் சபையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, நிர்வாக மாற்றத்தைத் தொடங்குவதற்கு அதிபர் டோனல்ட் டரம்ப் முறையாக ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, அமெரிக்க உளவுத்துறையின் முக்கிய வேவுத் தகவல்களை இனி திரு. பைடன் பெற முடியும்.

என்றாலும், நவம்பர் மூன்றாம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகச் சொல்லித் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் திரு. டிரம்ப்

இந்நிலையில், அனைத்துலகப் போக்கு, அச்சுறுத்தல் அபாயம் ஆகியவற்றின் தொடர்பில் திரு. பைடனுக்கு நாள்தோறும் விளக்கமளிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பொதுச் சேவை நிர்வாகம் வழங்கிய அனுமதியின்படி, ஜனவரி 20 ஆம் தேதி இடம்பெறவுள்ள பதவியேற்புக்குத் தயாராகத் திரு. பைடன் மில்லியன் டாலர் நிதியைப் பெற முடியும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்