Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முதல் வெளிநாட்டுப் பயணம்

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபிறகு முதன்முறையாகத் திரு. ஜோ பைடன், ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் தலைவர்களை நேரில் சென்று சந்திக்கவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபிறகு முதன்முறையாகத் திரு. ஜோ பைடன், ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் தலைவர்களை நேரில் சென்று சந்திக்கவிருக்கிறார்.

ஜனநாயகத்தை கட்டிக்காக்க வேண்டிய முக்கியத் தருணத்தில் தமது பயணம் அமைவதாக, திரு. பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை, ஜெனிவாவில் சந்திப்பதற்கு முன் அவர், G7, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலைச் சந்திப்புகளில் பங்கேற்பார்.

"ஜனநாயகக் கூட்டணியும் அமைப்புகளும் நவீனகால அச்சுறுத்தல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் எதிராக வேலை செய்யுமா? ஆம் என்று நான் நம்புகிறேன். இந்த வாரம், ஐரோப்பாவில் அதை நிரூபிக்க எங்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது" என்று திரு. பைடன் The Washington Post நாளேட்டில் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமைவரை, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய G7 பங்காளி நாடுகளின் தலைவர்களை அவர் இங்கிலாந்தில் சந்திப்பார்.

அங்கிருந்து அவர் ஜூன் 14ஆம் தேதி பிரஸ்ஸல்ஸ் சென்று NATO கூட்டணிச் சந்திப்பில் பங்கேற்பார்.
அதற்கு மறுநாள், ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தில் கலந்துகொள்வார்.

பின்னர் அவர், திரு. புட்டினைச் சந்திப்பார்.

78 வயதாகும் திரு. பைடனின் விரிவான இந்தப் பயணம், அவர் அமெரிக்காவை மட்டும் பிரதிநிதிக்கவில்லை, ஒரு ஜனநாயக் கூட்டமைப்பையே பிரதிநிதிக்கிறார் என்ற தெளிவான செய்தியைத் திரு. புட்டினுக்கு உணர்த்தும் என்று கவனிப்பாளர்கள் நம்புகின்றனர்.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்