Images
  • us (1)
    படம்: அமெரிக்க நீதித்துறை

அமெரிக்கா: நாட்டின் விநியோகத் தொடரில் உண்டான இடையூறுகளைச் சரிசெய்யும் நடவடிக்கையில் அதிபர் பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாட்டின் விநியோகத் தொடரில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

நெரிசல் மிக்க லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) துறைமுகத்தின் செயல்பாடுகள், நாள் முழுவதும் தொடர்வதற்கான ஒப்பந்தத்தை அவர் செய்துகொண்டுள்ளார்.

அமெரிக்க மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களுக்காகக் காத்திருக்கும் நேரம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், அந்த நடவடிக்கை பற்றி அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்குள் கடல்வழிச் செல்லும் கொள்கலன்களில் 40 விழுக்காட்டை லாஸ் ஏஞ்சலிஸ், லாங் பீச் (Long Beach) துறைமுகங்கள் கையாள்கின்றன.

லாஸ் ஏஞ்சலிஸ் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கி வைக்க, பல சரக்குக் கப்பல்கள் 10 நாள்வரை காத்திருக்கின்றன.

நோய்ப்பரவல் சூழலால், அமெரிக்காவில் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.

அதன் காரணமாக, உற்பத்தித் துறையிலும் போக்குவரத்து நடுவங்களிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

Top