Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரசிகர்களே இல்லாமல் தொடங்கிய பைடனின் 'அதிபருக்கான Twitter கணக்கு'

அமெரிக்க அதிபருக்கான அதிகாரத்துவ Twitter கணக்கு திரு. ஜோ பைடனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ரசிகர்களே இல்லாமல் தொடங்கிய பைடனின் 'அதிபருக்கான Twitter கணக்கு'

(கோப்புப் படம்: Reuters)

அமெரிக்க அதிபருக்கான அதிகாரத்துவ Twitter கணக்கு திரு. ஜோ பைடனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

@PresElectBiden எனும் அந்தக் கணக்கு எந்த ரசிகர்களும் இல்லாமல் தொடங்கியது.

அது குறித்து BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

@POTUS (President of the United States) என்ற பெயரில் செயல்படும் அமெரிக்க அதிபருக்கான அதிகாரத்துவக் கணக்கை முன்னைய அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து திரு டோனல்ட் டிரம்ப் பெற்றுக்கொண்டபோது அதில் 13 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் தற்போது நிலைமை வேறு.

அதிபருக்கான அதிகாரத்துவ கணக்கிலிருந்து அனைத்து ரசிகர்களும் அகற்றப்படுவர் என்று Twitter அண்மையில் அறிவித்தது.

ஆனால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

அது திரு பைடனின் பிரசாரக் குழுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

திரு. பைடன் இம்மாதம் 20-ஆம் தேதி அன்று, பதிவேற்கும்போது கணக்கு @POTUS எனும் பெயருக்கு மாற்றப்படும் என்று BBC தகவல் குறிப்பிட்டது.

கணக்கு தொடங்கப்பட்ட முதல் 6 மணி நேரத்திற்குள், சுமார் 400,000 ரசிகர்களைப் பெற்றார் திரு. பைடன்.

தற்போது அந்த கணக்கிற்கு சுமார் 830,300 ரசிகர்கள் உள்ளனர்.

திரு பைடனின் சொந்தக் கணக்கில் அவருக்கு 24 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்