Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக நாடுகள் இன்னும் கூடுதலான COVID-19 தடுப்பு மருந்துகளை நன்கொடையாகக் கொடுக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் பைடன்

 உலக நாடுகள் இன்னும் கூடுதலான COVID-19 தடுப்பு மருந்துகளை நன்கொடையாகக் கொடுக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் பைடன்

வாசிப்புநேரம் -

உலக நாடுகள் இன்னும் கூடுதலான COVID-19 தடுப்பு மருந்துகளை நன்கொடையாகக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கேட்டுக்கொண்டுள்ளார்.

இல்லாவிடில் நோய்ப்பரவலை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை அவர் சுட்டினார்.

உலக அளவில் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க நாடுகள் அவற்றின் மதிநுட்பச் சொத்து உரிமைகளை விட்டுக்கொடுக்கும்படியும் திரு.பைடன் கேட்டுக்கொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதுவகை ஓமிக்ரான் கிருமியை அவர் சுட்டினார்.

உலக அளவில் தடுப்பூசிகள் போடப்படும்வரை நோய்ப்பரவல் முடிவுக்கு வராது என்பதைப் புதுக் கிருமிவகை காட்டுவதாகத் திரு.பைடன் சொன்னார்.

அடுத்த வாரம் இடம்பெறவிருக்கும் உலக வர்த்தக நிறுவனத்தின் அமைச்சர்நிலைச் சந்திப்பில் கலந்துகொள்ளும் நாடுகள் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கும்படி அவர் வலியுறுத்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்