Images
  • 911
    (படம்: Chip Somodevilla/Getty Images/AFP)

செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த மூன்று இடங்களுக்கும் சென்ற அதிபர் பைடன்

அமெரிக்கா, தனது மண்ணில் நடத்தப்பட்ட மோசமான பயங்கரவாதத் தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவை அனுசரித்துள்ளது.

Al-Qaeda அமைப்பைச் சேர்ந்தவர்கள் நான்கு விமானங்களைக் கடத்திச் சென்று மூன்று இடங்களில் நடத்திய தாக்குதல்களில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

2001 செப்டம்பர் 11 ஆம் தேதி நியூயார்க், வாஷிங்டன், பென்சில்வேனியா (Pennsylvania) ஆகிய 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன.

அந்த 3 இடங்களுக்கும் அதிபர் ஜோ பைடன் நேற்று சென்று, தாக்குதலில் மாண்டோருக்கு மரியாதைச் செலுத்தினார்.

பென்சில்வேனியாவில் நடத்தப்பட்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் W. புஷ் (George W Bush) கலந்து கொண்டார்.

அவர் பொறுப்பிலிருந்தபோதுதான் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்பட்டது.

துயரம் மிகுந்த அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிப்பது எளிதல்ல என்று திரு. புஷ் கூறினார்.

-Reuters 

Top