Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் வாக்களித்தார்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் வாக்களித்தார்

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் அவரது துணைவியார் ஜில் பைடனும் வாக்களித்துள்ளனர்.

அதிபர் தேர்தலுக்காக, இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இதுவரை 74 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

டெலவேர் மாநிலத்திலுள்ள தமது சொந்த ஊரான விலமிங்டன் நகரில், திரு. பைடன் வாக்களித்தார்.

நேற்று, டெலவேர் மாநிலத்தில் அவர் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.

டெலவேர், அவரது சொந்த மாநிலம் என்பதால், அவர் எளிதில் அங்கு வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் டோனல்ட் டிரம்ப், அதிகப் போட்டி நிலவும் மாநிலங்களில் இன்னும் கூடுதலான பிரசாரக் கூட்டங்களை நடத்திவருகிறார். கடந்த சனிக்கிழமையன்று ஃபுளோரிடா மாநிலத்தில் அவர் வாக்களித்தார்.

2016ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் வாக்களித்தோரின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டோர், இந்தத் தேர்தலில்
முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். தேர்தலில் திரு. பைடன், முன்னிலை வகிப்பதாகப் பல்வேறு கருத்துகணிப்புகள் காட்டுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்