Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் தடை செய்யப்பட வேண்டும்' - பைடன்

அமெரிக்காவின் கொலராடோ (Colorado) நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைத் தடை செய்ய அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
'தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் தடை செய்யப்பட வேண்டும்' - பைடன்

(படம்: AFP/Mandel Ngan)

அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைத் தடை செய்ய அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நடந்த அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

பள்ளிகள், இரவு விடுதிகள், திரையரங்குகள், ஏனைய பொது இடங்கள் ஆகியவற்றில் இதுவரை நடந்துள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைச் சுட்டிய அதிபர், நேரம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்தார்.

அதற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தையும் செனட் சபையையும் கேட்டுக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கியால் 10 பேரைச் சுட்ட ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதத் தடை குறித்து திரு. பைடன் வாஷிங்டனில் பேசினார்.

அந்தச் சம்பவத்துக்கு ஒருசில நாள்களுக்கு முன்பு, அட்லாண்டா (Atlanta) நகரில் உள்ள இரண்டு உடல்பிடிப்பு நிலையங்களில் ஆடவர் ஒருவர் 8 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

- AFP/ec 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்