Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

160ஆம் ஆண்டை அனுசரிக்கும் 'பிக் பென்' கடிகாரம்

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் புகழ்பெற்ற 'பிக் பென்' கடிகாரம் இன்று தனது 160ஆம் ஆண்டை அனுசரிக்கிறது. முதன்முதலாக ஒலி எழுப்பப்பட்ட ஆண்டிலிருந்து இன்றுடன் 160 ஆண்டுகள் ஆகிவிட்டது.

வாசிப்புநேரம் -
160ஆம் ஆண்டை அனுசரிக்கும் 'பிக் பென்' கடிகாரம்

(படம்: Reuters)

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் புகழ்பெற்ற 'பிக் பென்' கடிகாரம் இன்று தனது 160ஆம் ஆண்டை அனுசரிக்கிறது. முதன்முதலாக ஒலி எழுப்பப்பட்ட ஆண்டிலிருந்து இன்றுடன் 160 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இருப்பினும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாட ஒலி எழுப்பப்படாது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதே அதற்கு காரணம். 2017ஆம் ஆண்டு தொடங்கிய மறுசீரமைப்புப் பணிகள், 2021ஆம் ஆண்டில் நிறைவடையும்.

96 மீட்டர் உயரமுள்ள கடிகாரம் நீண்ட காலம் நல்ல நிலையில் நீடிக்க மறுசீரமைப்பு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனில் ஆக அதிகமாகப் படம் பிடிக்கப்பட்டதாக நம்பப்படும் 'பிக் பென்' கடிகாரம் அமைந்துள்ள கட்டடம் சுற்றுப்பயணிகளை அதிகம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்று.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்