Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒரு காலத்தில், பூமியை பெரிய பறவைகள் ஆண்டன...

ஒரு காலத்தில், பூமியை பெரிய பறவைகள் ஆண்டன...

வாசிப்புநேரம் -
ஒரு காலத்தில், பூமியை பெரிய பறவைகள் ஆண்டன...

(படம்:Pixabay)

1980களில் அண்டார்க்டிக்காவின் சீமோர் தீவில் (Seymour Island) கண்டெடுக்கப்பட்ட புதைபடிமங்கள், உலகின் பெருங்கடல்களைப் பல மில்லியன் ஆண்டுகளுக்கு ஆண்ட பறவைகளுக்குச் சொந்தமானவை என்று தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலையின் அருங்காட்சியகத்தில் இருந்த அவற்றை 2015ஆம் ஆண்டில் தூசி தட்டி ஆராயத் தொடங்கினார் ஓர் இளங்கலை மாணவர்.

கூர்மையான பற்கள், நீண்ட மூக்கைக் கொண்ட அந்தப் பறவைகள், சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்குப் பூமியின் தென் பெருங்கடல்களில் சுற்றித் திரிந்ததாக CNN செய்தி நிறுவனம் கூறியது.

அவற்றின் இறக்கைகள் 6.4 மீட்டர் நீளம்.

அவையே Eocene காலக்கட்டத்தின் ஆகப் பெரிய பறக்கும் பறவைகளாக இருக்குமென CNN குறிப்பிட்டது.

டைனசோர்கள் அழிந்த பின், அவை பெரிய அளவுக்குப் பரிணாம வளரச்சி பெற்றதாக ஆராய்ச்சி சுட்டியது.

அந்தக் காலக்கட்டத்தில், அண்டார்க்டிக்கா வெப்பமாக இருந்திருக்கும் என்றும் அங்கு நிலப் பாலூட்டிகள் பல வாழ்ந்திருக்கும் என்றும் ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்