Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆகப் பெரிய டைனசோர் வகைகளில் ஒன்று ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

ஆகப் பெரிய டைனசோர் வகைகளில் ஒன்று ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

வாசிப்புநேரம் -
ஆகப் பெரிய டைனசோர் வகைகளில் ஒன்று ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

படம்: REUTERS

உலகின் ஆகப் பெரிய டைனசோர் வகைகளில் ஒன்று, ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

sauropod எனும் அந்த வகையைச் சேர்ந்த ஒரு டைனசோரின் எலும்புகள், முதன்முதலில் 2006-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் உள்ள பண்ணையில் அவை கண்டுபிடிக்கப்பட்டன.

அது குறித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

sauropod டைனசோர், 92 மில்லியன் ஆண்டுகளிலிருந்து 96 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது சுமார் 30 மீட்டர் உயரத்தில், அதாவது 2 மாடிக் கட்டடத்தின்
உயரத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.

உலகில் கண்டுபிடிக்கப்பட்ட 5 ஆகப் பெரிய டைனசோர் வகைகளில், அதுவும் சேர்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்