Images
  • drug
    ( படம்:  AFP )

ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டது

ஆஸ்திரேலிய-அமெரிக்க அதிகாரிகள் இணைந்து ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மாதம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் போதைப் பொருள் பிடிப்பட்டதாகவும், அது ஐஸ் வகையைச் சேர்ந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிடிபட்ட போதைப் பொருள், ஆஸ்திரேலிய-மெக்சிக்கோ கடத்தல் கும்பலுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

இரண்டு கொள்கலன்களில் 1.7 டன் ஐஸ் போதைப் பொருள் இருந்ததாகவும், அதன் சந்தை மதிப்பு 900 மில்லியன் டாலருக்கு மேல் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவிருந்த கொள்கலன்களில் அந்த போதைப் பொருள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.




 

Top