Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் ஆகப் பெரிய செல்வந்தர்கள் யார்யார்?

Forbes நிறுவனம் உலகின் ஆகப் பெரிய செல்வந்தர்களின் வருடாந்திரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

Forbes நிறுவனம் உலகின் ஆகப் பெரிய செல்வந்தர்களின் வருடாந்திரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில், பில்லியன் டாலருக்கும் அதிகமான செல்வத்தை வைத்திருக்கும் 2,755 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் அது 660 பேர் அதிகம்.

அவர்களில் கிட்டத்தட்ட 500 பேர், பட்டியலுக்குப் புதியவர்கள்.

அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களுடைய சொத்துகளின் மொத்த மதிப்பு 13.1 டிரில்லியன் டாலர்.

சென்ற ஆண்டு இடம்பெற்றவர்களுடைய சொத்து மதிப்பு 8 டிரில்லியன் டாலர்.

செல்வந்தர்களில் 86 விழுக்காட்டினர், கடந்த ஆண்டை விட மேலும் அதிகச் செல்வத்தைத் திரட்டியுள்ளதாக Forbes குறிப்பிட்டது.

அவர்கள் பெரும்பாலோர் அமெரிக்காவையும் சீனாவையும் சேர்ந்தவர்கள்.

ஆசியாவின் ஆகப் பெரிய பணக்காரரான
இந்தியாவின் திரு. முகேஷ் அம்பானி, பட்டியலில் 10-ஆவது இடத்தில் உள்ளார்.

பட்டியலில் இடம்பிடிக்க, செல்வந்தர்களின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கவேண்டும்.

பட்டியலில் உள்ள முதல் 10 பேர் யார்?

1. ஜெஃப் பெஸொஸ் (Jeff Bezos)

(படம்: Reuters)

(படம்: Reuters)

சொத்து மதிப்பு: 177 பில்லியன் டாலர்

Amazon நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அவர், 4-ஆவது ஆண்டாகப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

2. எலன் மஸ்க் (Elon Musk)

(படம்: Tobias Schwarz/Pool via REUTERS)

(படம்: Tobias Schwarz/Pool via REUTERS)

சொத்து மதிப்பு: 151 பில்லியன் டாலர்

3. பெர்னார்ட் ஆர்னோல்ட் குடும்பத்தார் (Bernard Arnault)

சொத்து மதிப்பு: 150 பில்லியன் டாலர்

4. பில் கேட்ஸ் (Bill Gates)

தொடர்ந்து 3வது முறையாக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடித்திருக்கும் Bill Gates. 

சொத்து மதிப்பு: 124 பில்லியன் டாலர்

5. மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg)

படம்: REUTERS/Stephen Lam

படம்: REUTERS/Stephen Lam

சொத்து மதிப்பு: 97 பில்லியன் டாலர்

6. வாரன் பஃப்பட் (Warren Buffet)

சொத்து மதிப்பு: 96 பில்லியன் டாலர்

7. லேரி எல்லிஸன் (Larry Ellison)

சொத்து மதிப்பு: 93 பில்லியன் டாலர்

8. லேரி பேஜ் (Larry Page)

சொத்து மதிப்பு: 91.5 பில்லியன் டாலர்

9. ஸெர்கேய் பிரின் (Sergey Brin)

சொத்து மதிப்பு: 89 பில்லியன் டாலர்

10. முகேஷ் அம்பானி

(படம்: REUTERS/Amit Dave) 

(படம்: REUTERS/Amit Dave) 

சொத்து மதிப்பு: 84.5 பில்லியன் டாலர்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்