Images
  • Netflix
    படம்: Netflix

இணையச் சவாலால் ஏற்பட்ட வாகன விபத்து - அமெரிக்கக் காவல்துறை விடுத்த எச்சரிக்கை

அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தைத் தொடர்ந்து, கண்ணைக் கட்டியவாறு வாகனம் ஓட்டவேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அண்மையில் தொடங்கப்பட்ட Bird Box சவாலில் பங்குகொண்ட இளையர், கண்களைத் தொப்பியால் மறைத்துக்கொண்டு வாகனத்தைச் செலுத்தினார்.

போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் வாகனத்தைச் செலுத்தி, தம்மை நோக்கி வந்துகொண்டிருந்த மற்ற வாகனங்களுடன் மோதினார்.


இது யூட்டா மாநிலத்தின் லேட்டன் (Layton) நகரத்தில் நடந்த விபத்து.

கடந்த ஆண்டின் இறுதியில் Netflix தளத்தில் வெளியான Bird Box திரைப்படத்தையொட்டி Bird Box சவால் அமைந்துள்ளது.

படத்தில் வரும் கதாபாத்திரங்களைப் போலவே இணையவாசிகளும் கண்ணை மறைத்துக்கொண்டு அன்றாட நடவடிக்கைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

அந்தச் சவாலில் பங்கெடுக்கவேண்டாம் என்று கடந்த வாரம் Netflix பார்வையாளர்களைக் கேட்டுக்கொண்டது.

இந்த வாரம், லேட்டன் நகரக் காவல்துறையும் நகரவாசிகளுக்கு அத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

Top