Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வளர்ப்புப் பறவை தாக்கி மாண்ட முதியவர்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கெசாவரி (cassowary) எனும் பெரிய பறவையால் தாக்கப்பட்ட 75 வயது முதியவர் மாண்டார். 

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கெசாவரி (cassowary) எனும் பெரிய பறவையால் தாக்கப்பட்ட 75 வயது முதியவர் மாண்டார்.

அந்தப் பறவையை அவர் வீட்டில் வளர்த்து வந்தார்.

BBC வெளியிட்ட தகவலின்படி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) அன்று கிடைத்த அழைப்பைத் தொடர்ந்து, மார்வின் ஹஜோஸ் (Marvin Hajos) எனும் முதியவரின் வீட்டிற்குக் காவல்துறையினர் சென்றனர்.

அங்கு கடுமையான காயங்களுடன் ஹஸோஸ்ஸைக் கண்டதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட ஆடவர் அங்கு மாண்டார்.

ஈமு (emu) பறவைகளைப் போன்ற தோற்றம் கொண்ட கெசாவரி பறவைகள் 45 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கக்கூடும்.

அவை உலகின் ஆகப் பெரிய பறக்காத பறவை இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

பறவையின் அருகிலிருந்தபோது ஹசோஸ் விழுந்திருக்கக்கூடும். அப்போது பறவை அவரைத் தாக்கியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

காவல்துறையின் முன்னோடி விசாரணையில், அந்தச் சம்பவம் ஒரு விபத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக BBC குறிப்பிட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்