Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கென்யாவில் 100 ஆண்டுகளுக்குப் பின் தென்பட்டுள்ள கறுஞ்சிறுத்தை

 ஒரு நூற்றாண்டுக்குப் பின் கறுஞ்சிறுத்தை அங்கு இருப்பதை கென்ய ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
கென்யாவில் 100 ஆண்டுகளுக்குப் பின் தென்பட்டுள்ள கறுஞ்சிறுத்தை

(படம்: Will Burrard-Lucas)

கென்யா: ஒரு நூற்றாண்டுக்குப் பின் கறுஞ்சிறுத்தை அங்கு இருப்பதை கென்ய ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சான் டியாகோ விலங்குத் தோட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் லொய்சபா (Loisaba) வனவிலங்குக் காப்பகத்தில் அமைத்த கேமராக்களில் சிறுத்தைப் புலியின் படங்கள் பதிவாகியுள்ளன.

விலங்குகளிடத்தில் Melanism எனும் மரபியல் குறைபாடு ஏற்படும்போது அவை கறுமையான உரோமத்தையும் தோலையும் பெறுகின்றன.

ஆப்பிரிக்காவில் கறுஞ்சிறுத்தை இருப்பது இதற்கு முன் 1909இல் உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவ்வட்டாரத்தில் கறுஞ்சிறுத்தைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அத்தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

உலகத்தில் இருக்கும் சிறுத்தைப் புலிகளின் மொத்த எண்ணிக்கையில் 11 விழுக்காடு மட்டுமே கறுஞ்சிறுத்தைகள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்