Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரத்தத்தை உறிஞ்சும் பறவைகள்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள கலபாகோஸ் (Galapagos) எனும் தீவில் ஒரு சிறிய பழுப்பு நிறப் பறவை உள்ளது.

வாசிப்புநேரம் -

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள கலபாகோஸ் (Galapagos) எனும் தீவில் ஒரு சிறிய பழுப்பு நிறப் பறவை உள்ளது.

அதன் பெயர் வெம்பயர் ஃபின்ச் (vampire finch).

மற்ற பறவைகள் எவ்வாறு விதைகள், தேன், பூச்சிகள் போன்றவற்றைச் சாப்பிடுகின்றனவோ அதேபோல ஃபின்ச் பறவையும் அவற்றைல் சாப்பிடும்.

ஆனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் பறவையின் போக்கு மாறிவிடும்.

உடனே ரத்தத்தைக் குடிக்கத் தொடங்கும்.

வெம்பயர் ஃபின்ச் (vampire finch) ஒரு கூட்டமாகச் சென்று கடற்பறவைகளைப் பின்னாலிருந்து தாக்கும்.

ஒரு ஃபின்ச் பறவை கடற்பறவையின் சிறகின் அடியில் கொத்தி ரத்தத்தை உறிஞ்சும்.

அதைத் தொடர்ந்து மற்ற ஃபின்ச் பறவைகளும் ஒவ்வொன்றாகக் கடற்பறவையிலிருந்து ரத்தத்தை உறிஞ்சத் தொடங்கும்.

கடற்பறவைகள் சீக்கிரம் பறந்துவிடுவதால் ஃபின்ச் பறவைகளால் அதிக ரத்தத்தை உறிஞ்சிக் கடற்பறவையைக் கொல்லும் சாத்தியம் குறைவு.

ஃபின்ச் பறவைகளுக்கு ரத்தத்தில் இருக்கும் இரும்புச் சத்து, உப்புச் சத்தை செரிமானம் செய்யும் ஆற்றல் உண்டு.

செரிமானத்துக்கு உதவும் Peptostreptococcaceae என்ற நுண்ணுயிர் ஃபின்ச் பறவைகளின் வயிற்றில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்