Images
  • Bob Hawke
    (படம்: REUTERS/Daniel Munoz/Files)

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் பாப் ஹாக் காலமானார்

(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)


ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பாப் ஹாக் (Bob Hawke) இன்று காலமானார்.

89 வயது திரு. ஹாக் ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சியைச் சேர்ந்த பிரதமர்களில் ஆக நீண்டகாலம் பதவி வகித்தவர்.

1983இலிருந்து 1991 வரை அவர் பிரதமராகப் பொறுப்பு வகித்தார்.

அவர் தேர்தலில் தோற்று வெளியேறவில்லை.

கட்சியில் இடம்பெற்ற கிளர்ச்சி காரணமாகவே அவர் பதவி விலகினார்.
 

Top