Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமானச் சிதைவுகளிலிருந்து மீட்கப்பட்டது காற்பந்தாட்டக்காரர் சலாவின் சடலமே என்பது உறுதி

அர்ஜென்ட்டினக் காற்பந்தாட்டக்காரர் எமிலியானோ சலா பயணம் செய்த விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் அவருடையது என அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -
விமானச் சிதைவுகளிலிருந்து மீட்கப்பட்டது காற்பந்தாட்டக்காரர் சலாவின் சடலமே என்பது உறுதி

படம்: REUTERS/Stephane Mahe

அர்ஜென்ட்டினக் காற்பந்தாட்டக்காரர் எமிலியானோ சலா பயணம் செய்த விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் அவருடையது என அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

அந்த விமானம் கடந்த மாதம் 21ஆம் தேதி பிரான்ஸின் மேற்குப் பகுதியில் இருந்து, கார்டிஃப் சிட்டி நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது காணாமற்போனது.

தீவிரத் தேடல் பணிகளுக்குப் பிறகு, விமானத்தின் சிதைவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.

அதில் இருந்த ஒரு சடலம், நேற்று போர்ட்லேண்ட் (Portland) துறைமுகப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டு அடையாளம் காணப்பட்டது.

மாண்டவர் சலாதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்