Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காற்பந்தாட்டக்காரர் சலா பயணம் செய்த விமானத்திலிருந்து சடலம் மீட்பு

ஆர்ஜெண்டீன காற்பந்தாட்டக்காரர் எமிலியானோ சலா (Emiliano Sala) பயணம் செய்த விமானத்தின் சிதைவுகளில் இருந்து, சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக பிரிட்டிஷ் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
காற்பந்தாட்டக்காரர் சலா பயணம் செய்த விமானத்திலிருந்து சடலம் மீட்பு

படம்: REUTERS/Rebecca Naden

அர்ஜென்ட்டின காற்பந்தாட்டக்காரர் எமிலியானோ சலா (Emiliano Sala) பயணம் செய்த விமானத்தின் சிதைவுகளில் இருந்து, சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக பிரிட்டிஷ் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படும்.

இங்கிலிஷ் கால்வாயைக் கடந்துசென்றபோது, கெர்ன்சி (Guernsey) தீவுக்கு அருகில் அந்த இலகுரக விமானம் கடந்த மாதம் 21ஆம் தேதி காணாமற்போனது.

விமானத்தில் 28 வயது சலாவும், விமானி டேவிட் இபோஸ்டனும் இருந்தனர்.

கார்டிஃப் சிட்டி (Cardiff City) அணியில் புதிதாகச் சேர்ந்துள்ள சலா, அந்த நகருக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது அசம்பாவிதம் நேர்ந்தது.

மோசமான பருவநிலை காரணமாக, விமானத்தைத் தேடி மீட்கும் பணி சிரமமானது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்