Images
  • boeing
    (படம்:AFP)

Boeing நிறுவனத்தின் பாதுகாப்பு வழிமுறைக் குறிப்புகளை அனைத்து விமான நிறுவனங்களும் பின்பற்ற கோரிக்கை

அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பு, Boeing நிறுவனம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைக் குறிப்புகளைப் பின்பற்றும்படி அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கேட்டுக்கொள்ளப் போவதாகக் கூறியுள்ளது.

முக்கியமான தகவல்-மானிகளில் கோளாறு ஏற்பட்டால், அந்தச் சூழலை விமானிகள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை Boeing நிறுவனக் குறிப்புகள் தெளிவுபடுத்துகின்றன.

இந்தோனேசியாவில் Lion Air நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் அண்மையில் விபத்துக்குள்ளானதையடுத்து, அது வெளியிடப்பட்டது.

புதிதாக வாங்கப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியதற்கு, விமானத்தின் தகவல்-மானிகளை விசாரணையாளர்கள் குறைகூறியிருந்தனர்.

விமானத்தின் முனைப்பகுதி எந்தக் கோணத்தில் இருக்கிறது, காற்றின் கோணம் போன்ற தகவல்களை விமானி பெற்றுக்கொள்வதில் கோளாறு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

விமான இயந்திரம் செயலிழப்பது, விமானம் செங்குத்தாகக் கீழே விழுவது போன்றவற்றைத் தடுக்க அந்தத் தகவல்கள் உதவும்.  

Top