Images
  • Boeing Black Box
    (படம்: AFP)

விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டி, குரல் பதிவுப் பெட்டி ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன


எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், அண்மையில் விபத்துக்குள்ளான அதன் போயிங் 737 மெக்ஸ் 8 ரக விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டியையும், குரல் பதிவுப் பெட்டியையும், ஆய்விற்காக, பாரிஸ் அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

போயிங் நிறுவனம் பயன்படுத்தும் மென்பொருளைக் கொண்டு, அந்தப் பெட்டிகளில் உள்ள விவரங்களைக் கண்டறிய முடியாமல் போனதால், அவை பாரிஸ்-இற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறிற்று.

முன்னதாக, போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்கள் அனைத்தும் முடக்கப்படவேண்டும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விமான விபத்திலிருந்து பெறப்பட்ட புதிய தடயங்கள், கடந்த ஐந்து மாதத்தில் நடந்த, போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்கள் தொடர்பான இரண்டு விபத்துகளுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாகப் புலப்படுத்தியது.

அதனை அடுத்து, அந்த ரக விமானங்களின் சேவையைத் தற்காலிகமாக முடக்கி வைக்க ஆணையம் முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டது. 

Top