Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தகவல்பகிர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள விமானிகளுக்கு போயிங் விமான நிறுவனம் அழைப்பு

போயிங் விமான நிறுவனம், அதன் தகவல்பகிர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள 200க்கும் அதிகமான விமானிகளுக்கும், தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
தகவல்பகிர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள விமானிகளுக்கு போயிங் விமான நிறுவனம் அழைப்பு

படம்: REUTERS/Lindsey Wasson

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

போயிங் விமான நிறுவனம், அதன் தகவல்பகிர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள 200க்கும் அதிகமான விமானிகளுக்கும், தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றுக்கும் அழைப்புவிடுத்துள்ளது.

737 Max ரக விமானங்களை மீண்டும் சேவையில் இணைக்கும் திட்டங்களுக்கு ஆதரவு திரட்டுவது அதன் நோக்கம்.

அந்தரக விமானம் செயல் இழந்து போவதைத் தடுக்கும் வகையில் மென்பொருளைத் திருத்தியமைக்க போயிங் முயற்சி செய்துவருகிறது.

அண்மை மாதங்களில் போயிங் 737 Max8 ரக விமானங்கள் இரண்டு விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, விசாரணையாளர்கள் மென்பொருளில் கோளாறு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

மென்பொருள் மேம்பாடு, விமானிகளுக்குப் பயிற்சி ஆகியவை தொடர்பில் வாடிக்கையாளர்களுடனும் கட்டுப்பாட்டு அமைப்புகளுடனும் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றவிருப்பதாக நிறுவனம் கூறியிருக்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்