Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சோதனையின் போது புதிய போயிங் விமானத்தின் கதவு உடைந்து பறந்தது

போயிங் நிறுவனம், Triple-7-X எனும் அதன் புதிய விமானத்தின் சோதனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
சோதனையின் போது புதிய போயிங் விமானத்தின் கதவு உடைந்து பறந்தது

(படம்: AFP/Jason Redmond)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

போயிங் நிறுவனம், Triple-7-X எனும் அதன் புதிய விமானத்தின் சோதனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

விமானம் செயல்படுவதற்கான அனுமதிச் சான்றிதழைப் பெற Triple-7-X விமானத்தில் இறுதிக் கட்டச் சோதனைகள் நடைபெற்றன.

அப்போது விமானத்தின் கதவு உடைந்து பறந்துவிட்டதாக சோதனைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதிக் கட்டச் சோதனையின்போது அத்தகைய நிகழ்வு ஏற்படுவது அரிது.

இதற்கு முன், போயிங் நிறுவனத்தின் 737 MAX ரக விமானம் இரண்டு விபத்துகளை எதிர்கொண்டதன் காரணமாக அது செயல்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

அந்தத் தடையை நீக்கும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ள நிலையில் புதிய விமானத்தின் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Triple-7-X விமானம் இந்தக் கோடைக்காலத்தில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது, அது அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்