Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

737 MAX ரக விமானங்களுக்கான மென்பொருள் புதுப்பிப்புப் பணி நிறைவு : போயிங் நிறுவனம்

போயிங் 737 MAX ரக விமானங்களுக்கான மென்பொருள் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்து விட்டதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
737 MAX ரக விமானங்களுக்கான மென்பொருள் புதுப்பிப்புப் பணி நிறைவு : போயிங் நிறுவனம்

(படம்: AFP/Jason Redmond)

போயிங் 737 MAX ரக விமானங்களுக்கான மென்பொருள் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்து விட்டதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு விமான விபத்துகளைத் தொடர்ந்து போயிங் 737 MAX ரக விமானங்கள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டன.

மென்பொருள் புதுப்பிப்புடன் சம்பந்தப்பட்ட பாவனைச் சோதனை, முன்னோட்டப் பயணம் ஆகியவையும் முடிவடைந்துள்ளதாக
போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானங்கள் மீண்டும் சேவையைத் தொடங்க அனுமதி வழங்கப்படுவதற்கு முன், அனைத்துலக ஒழுங்குமுறை ஆணையமும், அமெரிக்காவும் அவற்றுக்கு முறையான ஒப்புதல் வழங்க வேண்டும்.

முன்னோட்ட விமானத்துக்கான சான்றிதழைப் பெறும் வகையில், அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்புக்கு முறையாகக் கூடுதல் தகவல்கள் சமர்ப்பிக்கப்படும் என்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்