Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நெதர்லந்து: Boeing சரக்கு விமானத்தின் இயந்திரம் நடுவானில் வெடித்தது

நெதர்லந்தில் Boeing 747 சரக்கு விமானத்தின் இயந்திரம் நடுவானில் தீப்பிடித்ததால், அதன் பாகங்கள் விழுந்து இருவர் காயமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
நெதர்லந்து: Boeing சரக்கு விமானத்தின் இயந்திரம் நடுவானில் வெடித்தது

(படம்: REUTERS/Diego Vara)

நெதர்லந்தில் Boeing 747 சரக்கு விமானத்தின் இயந்திரம் நடுவானில் தீப்பிடித்ததால், அதன் பாகங்கள் விழுந்து இருவர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (பிப்ரவரி 20) நேர்ந்த அந்த விபத்தில் இயந்திரத்தின் உலோகப் பாகங்கள் Meerssen நகரின் பல இடங்களில் விழுந்து பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது.

விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் இயந்திரத்தில் பிரச்சினை ஏற்பட்டதாய் CNN செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதேநாளில், அமெரிக்காவின் டென்வர் நகரிலிருந்து புறப்பட்ட United Airlines இன் Boeing 777 விமானத்தின் இயந்திரத்திலும் கோளாறு ஏற்பட்டது.

அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தைப் போன்று, அளவில் சிறிய இயந்திரம் சரக்கு விமானத்தில் பொருத்தப்பட்டிருந்தது.

ஆனால் நெதர்லந்திலும், அமெரிக்காவிலும் ஏற்பட்ட இயந்திரக் கோளாற்றுக்குத் தொடர்பு இல்லை என்று ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு விமானங்களும் Pratt & Whitney PW4000 ரக இயந்திரத்தில் இயங்கியபோதும், அவற்றுக்கு இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Pratt & Whitney PW4000 ரக இயந்திரங்களைக் கொண்ட விமானங்களைச் சோதனையிடவுள்ளது Boeing.

அமெரிக்காவும் ஜப்பானும் Pratt & Whitney இயந்திரங்களைக் கொண்ட Boeing 777 விமானங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்