Images
  • social distancing
    (கோப்புப் படம்: REUTERS/Peter Cziborra) 

பிரிட்டனில் அடுத்த மாத இறுதிக்குள் பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

பிரிட்டனில் அடுத்த மாத இறுதிக்குள், பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக்கூடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கூறியுள்ளார்.

தற்போது தனிநபர்களிடையே ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம்.

ஜூன் 21ஆம் தேதி அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படலாம்.

முடக்கநிலைக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்த திரு ஜான்சன் அரசாங்கம் திட்டமிடுகிறது.

பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசித் திட்டம் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

அடுத்த கட்டமாக, இம்மாதம் 17ஆம் தேதி, வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடைகள் தளர்த்தப்படலாம்.

ஆனால், அவை முற்றிலும் நீக்கப்படமாட்டா என்று தெரிகிறது. 

Top