Images
  • bolton
    (படம்: REUTERS/Peter Nicholls/File Photo)

தேசியப் பாதுகாப்பு ஆலோசகரைப் பணிநீக்கம் செய்த அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப் அவரது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டனைப் (John Bolton) பணிநீக்கம் செய்துள்ளார்.

தமது முடிவை டுவிட்டர் பதிவில் விளக்கியுள்ளார் அதிபர் டிரம்ப்.

திரு போல்ட்டன் பரிந்துரைத்த பல ஆலோசனைகள் தமக்கு ஏற்புடையவையாக இல்லை என்றும் தமது நிர்வாகத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் திரு. போல்ட்டனின் கருத்துகளுக்கு உடன்படவில்லை என்றும் திரு. டிரம்ப் கூறினார்.

திரு. போல்ட்டனின் சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அதிபர் டிரம்ப்,
தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்கும் புதிய நபரின் பெயர் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.  

Top