Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

booster தடுப்பூசிகளைப் போடுவதற்கான அவசியம் தற்போது இல்லை: விஞ்ஞானிகள்

booster தடுப்பூசிகளைப் போடுவதற்கான அவசியம் தற்போது இல்லை: விஞ்ஞானிகள்

வாசிப்புநேரம் -
booster தடுப்பூசிகளைப் போடுவதற்கான அவசியம் தற்போது இல்லை: விஞ்ஞானிகள்

(கோப்புப் படம்: Reuters/Sandra Sanders)

COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிராக booster எனும் கூடுதல்
தடுப்பூசிகளைப் போடுவதற்கான அவசியம் தற்போது இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

குறிப்பாக, அந்தத் தொற்றுநோய்க்கு எதிராக அதிக எதிர்ப்புத்தன்மை கொண்டவர்களுக்கு அது தற்போது தேவைப்படாது என்று
The Lancet மருத்துவ சஞ்சிகையில் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தடுப்பூசியால் கிடைக்கும் தடுப்பாற்றல் மேலும் குறைந்தாலோ, தடுப்பூசிக்குக் கட்டுப்படாத புதுவகைக் கிருமி பரவினாலோ கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படலாம் என்று விஞ்ஞானிகள் கூறினார்.

அமெரிக்காவில் அடுத்த வாரத்திலிருந்து பொதுமக்களுக்குக் கூடுதல்
தடுப்பூசிகளைப் போட அதிபர் பைடனின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, Pfizer அல்லது Moderna
தடுப்பூசிகளைப் போட்டு முடித்த 8 மாதங்களுக்குப் பிறகு 3-ஆவது முறை தடுப்பூசி போடப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்