Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா-மெக்ஸிக்கோ எல்லையில் தடுப்புச் சுவருக்கு 1 பில்லியன் டாலர் ஒதுக்கீடு

அமெரிக்கா- மெக்ஸிக்கோ எல்லையில் தடுப்புச் சுவரை எழுப்புவதற்கு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு 1 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா-மெக்ஸிக்கோ எல்லையில் தடுப்புச் சுவருக்கு 1 பில்லியன் டாலர் ஒதுக்கீடு

(படம்: REUTERS/Jose Luis Gonzalez/File Photo)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்கா- மெக்ஸிக்கோ எல்லையில் தடுப்புச் சுவரை எழுப்புவதற்கு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு 1 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

சுவர் சர்ச்சையின் காரணமாகத் தேசிய நெருக்கடி நிலையை அறிவித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் திட்டத்துக்குக் கிடைத்த முதற்கட்டத் தொகை அது.

தேர்தல் பிரசாரக் காலத்தின்போது அவர் எல்லையில் சுவர் எழுப்பப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

அதனை ஜனநாயகக் கட்சியினர் எதிர்த்து வந்துள்ளனர்.

சுமார் 90 கிலோமீட்டர் நீளமுள்ள தடுப்புச் சுவரை எழுப்ப அந்த
1 பில்லியன் டாலர் தொகை உதவும்.

5 மீட்டர் உயரத்திற்குச் சுவரை எழுப்புவதுடன் அப்பகுதியில் சாலைகளை மேம்படுத்தவும் புதிய விளக்குகளைப் பொருத்தவும் அந்த நிதி உதவும்.

இது குறித்துக் கருத்துரைத்த ஜனநாயகக் கட்சி செனட்டர்கள்,
நிதியைப் பற்றி நாடாளுமன்றத்திடம் அறிவிப்பதற்கு முன்னர், உரிய குழுக்களிடம் தற்காப்பு அமைச்சு அனுமதி பெறத் தவறிவிட்டது என்று குறைகூறினர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்