Images
  • boston
    (படம்:Boston Sparks/Social Media/via REUTERS)

அமெரிக்காவில் எரிவாயுக் குழாய் சிதைவால் ஒருவர் மரணம்

அமெரிக்காவின் போஸ்ட்டன் (Boston) நகரில், எரிவாயுக் குழாய் சிதைந்ததால் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களில் ஒருவர் மாண்டார். குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.

வீடுகளும் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சுமார் 70 வெடிப்புச் சம்பவங்களும், தீச்சம்பவங்களும் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறின.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்த தெளிவான தகவல் இல்லை.

குறைந்தது 6 பேருக்குச் சிகிச்சை அளித்ததாய் உள்ளூர் மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் குடியிருப்போரை அங்கிருந்து வெளியேறும்படி காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சம்பவங்களுக்கு, எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை கூறியது.

Top