Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

போஸ்ட்டன் நெடுந்தொலைவோட்டத்தில் 90க்கும் மேற்பட்ட சீனப் போட்டியாளர்கள் மோசடி

பிரபல போஸ்ட்டன் நெடுந்தொலைவோட்டத்திற்குத் தகுதிபெற சுமார் 90 சீனப் போட்டியாளர்கள் மோசடி வேலையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
போஸ்ட்டன் நெடுந்தொலைவோட்டத்தில் 90க்கும் மேற்பட்ட சீனப் போட்டியாளர்கள் மோசடி

(படம்: Reuters)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஹாங்காங்: பிரபல போஸ்ட்டன் நெடுந்தொலைவோட்டத்திற்குத் தகுதிபெற சுமார் 90 சீனப் போட்டியாளர்கள் மோசடி வேலையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தி வாய்ஸ் ஆஃப் சைனா (The Voice of China) வானொலி நிலையம் அதனைத் தெரிவித்தது.

சீனச் சுற்றுபயண முகவருடன் கூட்டுச் சேர்ந்து போட்டியாளர்கள், தாங்கள் முன்பு கலந்துகொண்ட போட்டிகளை முடித்த நேரம் குறித்துப் போலியான தகவல்களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

சீனப் போட்டியாளர்கள் சிலர் அவர்கள் குறிப்பிட்டிருந்த நேரத்தைவிட இரண்டு மணிநேரத்திற்குப் பின்னரே பந்தயத்தை முடித்தனர்.

திங்கட்கிழமை (ஏப்ரல் 15) நடைபெற்ற போட்டியில் சுமார் 30,200 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் சுமார் 950 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

உலகில் ஆக நீண்ட காலமாக நடந்துவரும் பந்தயங்களில் போஸ்ட்டன் நெடுந்தொலைவோட்டமும் ஒன்று. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்