Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தவறாகப் போன அழகுசீர் அறுவை சிகிச்சை - 50 மில்லியன் டாலர் வழக்குப் பதிவு செய்துள்ள பிரபலம்

முன்னாள் விளம்பர அழகியான லிண்டா எவஞ்செலிஸ்டா (Linda Evangelista), தமக்கு அழகுசீர் அறுவைச் சிகிச்சை செய்த நிறுவனத்திற்கு எதிராக 50 மில்லியன் டாலர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

வாசிப்புநேரம் -
தவறாகப் போன அழகுசீர் அறுவை சிகிச்சை - 50 மில்லியன் டாலர் வழக்குப் பதிவு செய்துள்ள பிரபலம்

(படம்: Astrid Stawiarz/Getty Images for Fragrance Foundation/AFP)

முன்னாள் விளம்பர அழகியான லிண்டா எவஞ்செலிஸ்டா (Linda Evangelista), தமக்கு அழகுசீர் அறுவைச் சிகிச்சை செய்த நிறுவனத்திற்கு எதிராக 50 மில்லியன் டாலர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

அந்த அழகுசீர் சிகிச்சைகள், தமது முகத்தைக் கொடூரமாகச் சிதைத்துவிட்டதாகவும், தனிமையில் வாழும் கட்டாயத்திற்குத் தம்மைத் தள்ளியதாகவும் அவர் கூறினார்.

1990களில், மிகவும் பிரபலமான விளம்பர அழகிகளில் எவஞ்செலிஸ்டாவும் ஒருவர்.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் கொழுப்பைக் குறைப்பதற்காகச் சிகிச்சை மேற்கொண்டதாக அவர் தமது Instagram பக்கத்தில் குறிப்பிட்டார்.

ஆனால், அரிய பக்கவிளைவால் பாதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை செய்யப்பட்ட இடங்களில் வீக்கங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது வாழ்வாதாரம் அழிந்துபோனதோடு, மனச்சோர்வுக்கும் சோகத்திற்கும் ஆளானதாக எவஞ்செலிஸ்டா கூறினார்.

சிகிச்சையை மேற்கொண்ட Zeltiq Aesthetics நிறுவனம் அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்