Images
  • boston
    (படம்: Pixabay)

அமெரிக்கா: குணப்படுத்த முடியாத அரியவகை மூளை நோயைக்கொண்டிருந்த சிறுமிக்கு மறுவாழ்வு

அமெரிக்கா: குணப்படுத்தமுடியாத அரியவகை மூளை நோயைக்கொண்டிருந்த சிறுமிக்கு உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று எண்ணப்பட்டது.

ஆனால், வழக்கத்தைவிட அதிக வேகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தால், சிறுமி மறுவாழ்வு பெற்றுள்ளார்.

8 வயது மிலா மக்கோவெச் என்ற அச்சிறுமிக்கு பெட்டன் நோய் (Batten disease) உள்ளது.


பெட்டன் நோய் இருப்போருக்கு, அவர்களின் மூளையின் உயிரணுக்களால் கழிவுப்பொருள்களைக் கரைக்கமுடியாது. அதனால், உயிரணுக்கள் மடிந்துவிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் மூளை செயல்திறன் நாளடைவில் குறைந்துவிடும்.

மிலாவுக்கும் அவ்வாறு நடந்தது. 4 வயதாக இருந்தபோது, அவரின் கண் பார்வை மங்கத் தொடங்கியது. 6 வயதில் தனது கண் பார்வையை இழந்தார். அவரால் ஒழுங்காகப் பேசவும் முடியவில்லை.

அப்போது மிலாவின் மரபணுக்களை ஆராய்ந்த மருத்துவர்கள், சிறுமிக்கு சிகிச்சை வழங்க வழி கண்டுபிடித்தனர்.

ஒரு சிறப்பு மருந்தைக் கண்டுபிடித்த மருத்துவர்கள், அதைச் சோதித்து, அதிகாரிகளிடம் உரிய அனுமதியைப பெற ஓராண்டு மட்டுமே எடுத்துக்கொண்டனர்.

வழக்கமாக அந்த நடைமுறைகள் முடிய 11 ஆண்டுகள் வரை ஆகலாம்.

அந்த மருந்தால் மிலாவின் நோய் குணமாகவில்லை என்றாலும், அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் தெரிவதாகக் கூறப்பட்டுள்ளது.  

Top